Pages

Friday, November 12, 2010

தமிழ் படிக்கலாம்! வாருங்கள்!!

தமிழ்! தெரிந்தோ தெரியாமலோ நம்மில் பலருக்கும் தமிழ் நமது தாய்மொழியாகவே இருந்தாலும், நாம் தமிழை அனுபவித்து, ஆராய்ந்து, கேள்விகள் கேட்டு, சிந்தித்து கற்றுக் கொள்ளவில்லை. நாம் மட்டும் நமது ஒன்றாம் வகுப்பில் இருந்து பத்தாம் வகுப்பு வரை தமிழ் புத்தகத்தில் உள்ள நல்ல விஷயங்களில் ஒரு சிலவற்றையாவது தேர்வுக்காகப் படிக்காமல் வாழ்க்கைக்காகப் படிக்க கற்றுக் கொண்டிருந்தோம் என்றால் 
ஒவ்வொரு தமிழனின் வாழ்க்கையும் உலகிற்கு ஒரு எடுத்துக்காட்டாக இருந்திருக்கும். 

இனிமேலாவது தமிழைத் தேர்வுக்காகப் படிக்காமல் வாழ்க்கைக்காகப் படிப்போம். இனி வரும் தலை முறைக்கும் கற்றுக் கொடுப்போம்.

இணையத்தில் நிறைய தமிழ் புத்தகங்கள் இலவசமாக இருக்கின்றது.  பின்வரும் இணைய தளங்களில் பார்க்கவும்.

  1. http://www.tamillibrary.org/ - தமிழ் கற்றுக் கொள்வதற்கு மிகவும் பயனுள்ள தளம்
  2. http://www.chennailibrary.com/ -  தமிழ் புத்தகங்கள் இலவசமாக படிக்க கிடைக்கும்
  3. http://www.tamilvu.org/library/libindex.htm - தமிழ் நூலகம் 
  4. http://www.tamilheritage.org/ -

Monday, November 8, 2010

தமிழ் குறும்படங்கள்

தமிழ் குறும்படங்களை you tube ல் பார்த்து சிந்திக்கவும். 


  1. மிட்டாய் வீடு - http://www.youtube.com/watch?v=XchsU_dJ_mQ
  2. காதலில் சொதப்புவது எப்படி - http://www.youtube.com/watch?v=cQ21nmUojK8&feature=related
  3. நடந்தது  என்னன்னா... - http://www.youtube.com/watch?v=FTyz1d4iv1s
  4. ஒரு படம் எடுக்கணும் - http://www.youtube.com/watch?v=E-Zp0NHdjqk
  5. புதையல் - http://www.youtube.com/watch?v=Zz8nRwQ4Erw&feature=related
  6. கனவு கீர்த்தனை - http://www.youtube.com/watch?v=WMyVc76bqFg&feature=related
  7. The Juniors - http://www.youtube.com/watch?v=XYlBp2kGsZ0&feature=related 
  8. Muttham - http://www.youtube.com/watch?v=I4LJMUMgGnQ&feature=related

Tuesday, November 2, 2010

வேலையைத் தேடுவோம்!!! http://www.joblistindia.com/

http://www.joblistindia.com/
இந்த வலைத்தளம் வேலை தேடுபவர்களுக்கும்/ வேலை கொடுப்பவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். 






என்ன படிக்கலாம் ? எங்கு படிக்கலாம்? What to study....Where to study

http://www.studyguideindia.com/


மேல் குறிப்பிட்ட வலைத்தளம் படிக்கும் மாணவ / மாணவிகளுக்கும், வழிகாட்டுபவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்தியாவில் உள்ள கல்லூரிகள், பாடங்கள், கல்விக் கடன் பெறும் வழி முறைகள் மற்றும் பல பயனுள்ள செய்திகளைத் தருகிறது.

Monday, November 1, 2010

மின்சாரம் அது சம்சாரம் ???

"தேவையான பொழுது மின்சாரத்தை உபயோகிப்போம். தேவை இல்லாத பொழுது மின்சாரத்தின் பயன்பாட்டை நிறுத்துவோம். " - 

யோசித்து பாருங்கள்! இன்னும் எத்தனை கிராமங்களில் மின்சாரம் இல்லை? அப்படியே இருந்தாலும் கிராமங்களில் தான் மின் வெட்டு மிக அதிகம். (அறிவித்தும் & அறிவிக்காமலும்). எத்தனை தொழில்கள் மின்வெட்டால் பாதிக்கப் படுகின்றன? எத்தனை தொழிலாளர்கள் பாதிக்கப் படுகிறார்கள்? நேரடியாகவோ மறைமுகமாகவோ எத்தனை மக்கள் மின்சாரம் இல்லாமையால் பாதிக்கப் படுகிறார்கள்?
 
கொஞ்சம் தொடர்ந்து படியுங்கள்.

நம்ம எல்லாரும் விசு அவர்களின் "சம்சாரம் அது மின்சாரம்" திரைப்படம் பார்த்திருப்போம். பார்க்கவில்லையெனில் ஒரு முறை பாருங்கள். குடும்பத்தோடு பார்க்க வேண்டிய திரைப்படம். நம்ம விஷயத்துக்கு வருவோம். 

இந்த காலத்துல ஒரு ஆண், பெண்ணின் துணை இல்லாமலும் அல்லது ஒரு பெண் ஆணின் துணை இல்லாமலும் வாழ்ந்து விட முடியும். ஆனால் நாம் அனைவரும் மின்சாரம் இல்லாமல் வாழ முடியுமா? நம்ம தமிழ் நாட்டுல அடிக்கடி "அறிவிக்கப்பட்ட மின்வெட்டு" அப்புறம் "அறிவிக்காத மின்வெட்டு" அப்படின்னு வெட்டித் தள்ளுவது வழக்கம். தமிழ் நாடு மின்சார வாரியமா அல்லது தமிழ் நாடு மின்வெட்டு வாரியமா என்று பத்திரிகைகளில் செய்திகள் படித்திருப்போம். 

நமக்கு எப்பொழுதுமே பிறரை குறை சொல்லித்தான் பழக்கம். நம்ம கூடப் பிறந்த பழக்கத்தை அவ்வளவு சீக்கிரம் விட்டு விட முடியுமா? முதலில் நம்ம அரசாங்கத்தை  (இளித்தவாயன்?) திட்டுவோம். 
  1. நம்ம அரசாங்கத்தால மின்சார வாரியத்தையும், மின்சாரத்தையும் திறமையாக நிர்வகிக்க முடியல. இது நமக்குத் தெரிந்த உண்மை.
  2. மின்சார வாரியத்தை திறம்பட நடத்துவதற்கு தேவையான தகுதி உள்ளவர்கள், தலைமைப் பொறுப்பில் இருக்கிறார்களா? அப்படி இருந்தால் அவர்களுக்கு அரசாங்கத்தின் அதிகார வர்க்கத்தில் இருந்து தரப்படும் இடைஞ்சல்கள் அல்லது தொல்லைகள் யாவை?
  3. இப்பொழுது நாம் மின் பற்றாக்குறையுடன் இருக்கிறோம். அடுத்த ஐந்து வருடத்தில் இருந்து பத்து வருடத்திற்கான மின்சார வாரியத்தின் தொலை நோக்குப் பார்வை என்ன? எப்பொழுது பற்றாக்குறை தீரும்? அல்லது தீராப் பற்றாக்குறையுடன் தொடரப் போகிறோமா?
  4. மின்சாரம் உற்பத்தி மற்றும் உற்பத்திக்கு தேவையான மூலப் பொருள்கள் முதல் கடைசி வாடிக்கையாளர் (அட நம்மளையும் சேர்த்து தான்!)  வரை, எங்கெல்லாம் இன்னும் திறமையாகவும், சிறந்த தரத்துடனும், மின்சாரத்தை பற்றிய விழிப்புணர்வையும் மற்றும் பிற நல்ல விஷயங்களையும் (அட தெரியல அப்படிங்கறத தான் கொஞ்சம் நாசூக்காக) கொண்டு வந்து செயல் படுத்த முடியும்?
  5. பிற நல்ல விஷயங்களை சில: 
    1. மின் கசிவை முடிந்த வரை குறைத்தல் 
    2. மின் திருட்டை முற்றிலும் ஒழித்தல்
    3. கார்பன் வெளியீடு அதிகம் இல்லாத முறைகளில் மின்சாரம் தயாரித்தல். (Using Renewable Energy to produce electricity - http://en.wikipedia.org/wiki/Renewable_energy   Greenhouse Gas - http://en.wikipedia.org/wiki/Greenhouse_gas#Greenhouse_effects_in_Earth.27s_atmosphere 
    4. Bloom Energy - a company jointly founded by Mr. KR Sridhar, produces electricity with very less  emission of Carbon Di Oxide - http://www.bloomenergy.com)
இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கு. முதலில் ஒரு நல்ல தலைமை அதிகாரியை போட்டு, அவரைக் கொஞ்சம் சுதந்திரமா வேலை செய்ய விட்டார்கள் என்றால் அதுவே ஒரு நல்ல துவக்கம். இங்க நல்ல துவக்கமும் வேண்டும் அதே நேரம் ஒரு தெளிவான தொலை நோக்கு பார்வையுடன், திறந்த மனதுடன், வேலை செய்யும் அனைவரையும் ஒருங்கிணைத்து நடத்திச் செல்லும் திறமையும் வேண்டும். இது எப்ப நடக்கும்??? உண்மைய சொல்லணும்னா தெரியல. 

அடுத்த முக்கியமான விஷயத்துக்கு வருவோம். ஒரு உபயோகிப்பாளர் (நுகர்வோர்) என்கிற முறையில் நம்ம என்ன செய்ய முடியும்? எப்படி மின்சாரத்தை நாம உபயோகிக்கணும்?

கொஞ்சம் யோசித்து பார்த்தால் நம்ம பக்கமும் நிறைய தப்பு இருக்கு. ஒரு சின்ன பட்டியல் போடலாமா?
  1.  நம்ம வீடு - 
    1. எத்தனை பேர் லைட் சுவிட்சையோ அல்லது FAN சுவிட்சையோ தேவையான பொழுது மட்டும் போடறோம்? தேவை இல்லாத பொழுது மறக்காமல்  அணைத்து விடுகிறோம்? இது லைட்டுக்கும் FAN க்கும் மட்டும் அல்ல. நம்ம வீட்டில் மின்சாரத்தை பயன்படுத்தி வேலை செய்கிற அனைத்து பொருள்களுக்கும் இது பொருந்தும். 
    2. எத்தனை பேர் நம்ம செல் போனை விடிய விடிய சார்ஜ் போடறோம்? 
    3. நம்ம வீடு TV பெட்டிக்கு மின்சாரம் வருவதற்கு உள்ள மெயின் சுவிட்சை என்றாவது அணைக்கும் பழக்கம் உண்டா?
  2. அலுவலகம்: மேல கேட்ட அனைத்து கேள்விகளும் இங்கயும் உண்டு. என்ன சில பேர் அவங்க சொந்த பணத்தை செலவு செய்யும் பொழுது "சிக்கனம் சிகாமணி" ஆக இருப்பாங்க. அதே அடுத்தவங்க பணத்தை "தாராளப் பிரபு" ஆக செலவு செய்வார்கள். நான் நிறைய அரசாங்க மற்றும் தனியார் அலுவலகத்தில் பார்த்தவைகள். நம்ம மக்கள் மதியம் சாப்பிட வெளியில் போகும் பொழுது அவங்க ரூமில் உள்ள லைட், FAN மற்றும் சில - எதையும் மறந்தும் அணைக்க மாட்டார்கள்.
  3. நம்முடைய ஒவ்வொரு நாளிலும் மின்சாரம் இல்லாமல் நாம் இருக்கக் கூடிய நேரம் நிச்சயமாகக் குறைவு (மின்வெட்டு இல்லாமல் இருந்தால்.)

இப்படி நம்ம வாழ்க்கையில நம்ம கூட இருக்கிறது மின்சாரம். நிச்சயமாக சம்சாரம் இல்லாமல் நாம  இருக்க முடியும். ஆனால் மின்சாரம் இல்லாமல் இருக்க முடியுமா? இப்போதைக்கு நிச்சயமாக இருக்க முடியாது. 

அப்படின்னா ஒரே வழி: 
தேவையான பொழுது மின்சாரத்தை உபயோகிப்போம். தேவை இல்லாத பொழுது மின்சாரத்தின் பயன்பாட்டை நிறுத்துவோம்.

முதலில் நாம் இதை நமது மறக்க முடியாத பழக்கமாக கொண்டு வருவோம். நம்மால் எங்கெல்லாம் இதனை செயல் படுத்த முடியுமோ, செயல் படுத்துவோம். நமது குழந்தைகளுக்கும், நமது வீட்டில் உள்ளவர்களுக்கும் மின்சாரத்தை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.  

யோசித்து பாருங்கள்! இன்னும் எத்தனை கிராமங்களில் மின்சாரம் இல்லை? அப்படியே இருந்தாலும் கிராமங்களில் தான் மின் வெட்டு மிக அதிகம். (அறிவித்தும் & அறிவிக்காமலும்). எத்தனை தொழில்கள் மின்வெட்டால் பாதிக்கப் படுகின்றன? எத்தனை தொழிலாளர்கள் பாதிக்கப் படுகிறார்கள்? நேரடியாகவோ மறைமுகமாகவோ எத்தனை மக்கள் மின்சாரம் இல்லாமையால் பாதிக்கப் படுகிறார்கள்?

மேலும் சில தகவல்கள்:  
மின்சாரத்தை எப்படி சேமிப்பது பற்றிய விளக்கங்கள் பின்வரும் வலைத்தளங்களில் உள்ளது.
  1. http://www.tatapower.com/environment/powersaving-tips.aspx
  2. http://india.gov.in/spotlight/spotlight_archive.php?id=52  
    1. Measures for Energy Conservation - External website that opens in a new window
    2. Tips for Energy Conservation in the Home (36.0KB) - PDF file that opens in a new window
    3. Tips for Energy Conservation in Industries (216KB) - PDF file that opens in a new window
    4. Tips for Saving Gas at Home - External website that opens in a new window
    5. Tips for Saving Petrol on Roads - External website that opens in a new window
    6. More Energy Saving Tips - External website that opens in a new window
    7. Handbook on Energy Conscious Buildings - External website that opens in a new window
    8. Power Saving Guide - External website that opens in a new window
    9. Energy Calculator - External website that opens in a new window
    10. Energy Labelling Programme - External website that opens in a new window
    11. Let's Save Energy - External website that opens in a new window
    12. Bachat Lamp Yojana - External website that opens in a new window
    13. Energy Efficiency Home Survey
  3. http://www.e2singapore.gov.sg/energy-saving-tips.html
  4. http://www.e2singapore.gov.sg/docs/EC_Booklet.pdf
  5. http://michaelbluejay.com/electricity/computers.html
  6. http://library.thinkquest.org/06aug/00442/homeelectricity.htm
  7. http://www.greenpeace.org/international/campaigns/climate-change/take_action/your-energy/
  8. http://en.wikipedia.org/wiki/Renewable_energy
  9. http://en.wikipedia.org/wiki/Greenhouse_gas#Greenhouse_effects_in_Earth.27s_atmosphere

Friday, October 22, 2010

http://www.instapaper.com - பிறகு படிக்கலாம்

நம்ம சில நேரம் Internet ல் சில தகவல்கள் படிக்க நேரம் இருக்காது. பிறகு படிக்கலாம் அப்படின்னு நினைப்போம். எப்போதும் போல மறந்துடுவோம். சில விஷயங்களை படித்தவுடன், நமக்கு Useful ஆக இருக்கும்னு நினைத்தோம் என்றால் எங்கயாவது சேமித்து வைப்போம். எப்போதும் போல அதையும் மறந்துடுவோம். இன்னிக்கு internet la உலா வரும் பொழுது இந்த வலைத்தளம் பார்த்தேன். http://www.instapaper.com

அப்புறம் என்ன? Try பண்ணி பாருங்க. 

How it works

Instapaper gives you a Read Later bookmark.
  1. When you find something you want to read, but you don't have time, click Read Later.
  2. Come back when you have time, or read your articles on the go.
Register for a free account to get started.
 

Saturday, October 2, 2010

தமிழ் பேப்பர் www.tamilpaper.net

இன்று கிழக்கு பதிப்பகத்தின் இணையப் பத்திரிகை தமிழ் பேப்பர் வெளியீடு. www.tamilpaper.net

முதல் பதிப்பு - முற்றிலும் மாறுபட்ட பதிப்பு. எனக்குப் பிடித்த சில:

ஜென்வழி:
நம் ஊர்ப் பழமொழியிலும் ஜென் உண்டு. காகிதச் சுரைக்காய், பொரியலுக்கு ஆகாது. நீங்கள் நல்ல விஷயங்களைப் படிக்கிறீர்களா? அல்லது, பின்பற்றுகிறீர்களா?

தமிழ் படி:
“அதனாலதாண்டா சொல்லறேன். இலக்கணம் மாறாம இருந்தாலும் அதைச் சொல்லித் தர்ற விதம் மாறணும். அது நடக்கலைன்னா கத்துக்கறவங்களோட இண்டரெஸ்ட் இல்லாமப் போயிடும்.”


மனுநீதியின் வெற்றி: (பாபர் மசூதி - ராமர் கோவில் வழக்கு )
இந்த வழக்கு மேற்கொண்டு நிச்சயம் உச்ச நீதிமன்றத்துக்குச் செல்லப்போகிறது. அங்கு என்ன தீர்ப்பு வந்தாலும் ஒன்றுமட்டும் நிச்சயம். இந்தியா 1992-லிருந்து மிகவும் முன்னே சென்றுள்ளது. கலவரம், அடிதடி என்று நாம் அனைவரும் பயந்தமாதிரி ஒன்றும் நிகழவில்லை. இந்த ஒரு விஷயத்துக்காகவே நம்மை நாமே பாராட்டிக்கொள்ளலாம்.

இன்னும் நிறைய விஷயங்கள். தெளிவான மாறுபட்ட கருத்துக்கள் மேலும் படிக்க இங்கே கிளிக் செய்க. www.tamilpaper.net


Friday, October 1, 2010

How Stuff Works? Does it work really that way?

Have you ever wondered how something works? Say how internet works? How the stock market works? etc. Ask all the questions and find your answers here. HOW STUFF WORKS

உங்கள் கேள்விக்கு பதில் இங்கே!

http://www.answers.com/main/what_content.jsp this site provides answers to your questions on Maths, Science, Finance etc.



Wednesday, September 29, 2010

Sunday, September 26, 2010

இரத்த தானம் செய்வோம்!

இரத்த தானம்! நமக்கு இயற்கை கொடுத்த கொடையை, நாம் இருக்கும் பொழுதே பிறர்க்கும் கொடுக்கக்  கூடிய ஒன்று. 18 வயது முதல் 55 வயது வரை , ஆரோக்கியமாக இருக்கும் அனைவரும் 12 வாரங்களுக்கு ஒரு முறை ஒரு யூனிட் (350 ml to 450 ml) கொடையாகக் கொடுப்பது நமக்கும் நல்லது. நாம் பிறர்க்கு நல்லது செய்யக் கிடைத்த வாய்ப்பு.

இதுவரை இரத்த தானம் செய்ய வில்லையா? இன்றே செய்திடுவோம். குறைந்த பட்சம் ஓர் ஆண்டுக்கு 2 முதல் 3 முறை இரத்த தானம் செய்வோம்.

இரத்தம் கொடுப்பதற்கும், பெறுவதற்கும் பின்வரும் வலை தளங்களில் பதிந்து கொள்ளவும்.
இரத்த தானம் பற்றிய தகவல்கள்:
நீங்கள் இரத்தம் கொடுக்கும் முன் தெரிந்து கொள்ள வேண்டியவை http://www.blooda2z.com/blood-donor-requirements
எங்கெல்லாம் இரத்தம் தேவைப் படுகிறது?
இரத்த தானம் பற்றிய சில தகவல்கள்:

தமிழ் புத்தகங்கள் வாங்க

  1. கிழக்கு பதிப்பகம் - An imprint of New Horizon Media. வலை தளம் www.nhm.in  குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் படிக்க வேண்டிய புத்தகங்கள் வெளியிடப் படுகின்றது. வீட்டில் உபயோகமில்லாத தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தவிர்த்து ஆடியோ புத்தகங்கள் கேட்கலாம். நிச்சயமாக தமிழ் புத்தக உலகில் ஒரு மாற்றத்தை கொண்டு வந்துள்ளார்கள். நிறுவனர் பத்ரி மற்றும் நிறுவனத்தில் உள்ள அனைவருக்கும் நன்றி. மேலும் நல்ல புத்தகங்கள், குறிப்பாக பள்ளி மாணவர்களுக்கும்/மாணவிகளுக்கும் தேவையான நல்ல புத்தகங்கள் நிறைய வர வேண்டும். சென்னையில் புத்தகங்கள் வாங்க: முகவரி:

    கிழக்கு புத்தக ஷோரூம்
    3B, பி.எம்.ஜி. காம்ப்ளக்ஸ் (தரைத்தளம்)
    57, தெற்கு உஸ்மான் சாலை (ரத்னா பவன் எதிரில், தி.நகர் பேருந்து நிலையம் அருகில்)
    தி.நகர்
    சென்னை - 600 017
    தொலைபேசி: 044-42868126
    மொபைல்: 95000-45640  பத்ரி அவர்களின் வலைத்தளம்: 
    http://thoughtsintamil.blogspot.com/ 
  2. சுகி. சிவம் அவர்களின் புத்தகங்கள். நல்ல கருத்துக்கள், நம்மை யோசிக்க வைக்கும்.  http://www.sukisivam.com/publications_books.asp

Saturday, September 25, 2010

வேலி காத்தான் மரத்தை அழிப்போம்!!!

வேலி காத்தான் அல்லது சீமைக் கருவேல் அல்லது வெளி கருவை அல்லது டில்லி முள் அல்லது காட்டு கருவல் அல்லது சீன கருவல், அப்பா தமிழ் நாட்டுல ஒரு மரத்துக்கு எத்தனை பெயர்கள்? 

இந்த மரம் இருந்தா, தயவு செய்து மரத்தையும், மரத்தின் வேரையும் முழுமையாக அழித்து விடுங்கள். 

நம்ம தமிழ் நாட்டுல இராமநாதபுரம் மாவட்டம் வறட்சியாக இருப்பதில் இந்த மரங்களுக்கும் பெரும் பங்குண்டாம். இந்த மரம் நிலத்தடி தண்ணீரை முழுமையாக காலி பண்ணிடுமாம். 

இன்னும் இதை பத்தி கொஞ்சம் தெளிவா படித்து விட்டு எழுதறேன்.

இந்த மரத்தை பற்றி சில தகவல்கள்:

http://www.fao.org/docrep/006/ad317e/AD317E07.htm

Sunday, September 19, 2010

E - WASTE - REDUCE REUSE RECYCLE

  1. E-Waste அப்படின்னா என்ன ? 
    • நம்ம பயன் படுத்தாத அல்லது பயன் படுத்த முடியாத Electrical-Electronic பொருள்களை E-வேஸ்ட் என்று சொல்லலாம். உதாரணத்துக்கு நம்ம வீட்டில்  உள்ள பழைய ரேடியோ,  டேப்-ரெகார்டர், வயர், பாட்டரி முதல் நாம use பண்ணாத வாஷிங் மெஷின், TV, செல் போன் வரை எல்லாமே E-Waste தான்.
  2. E-Waste னால் என்ன பிரச்சினை ? 
    • E-Waste ல் தங்கம், வெள்ளி, பிளாட்டினம், தாமிரம் போன்ற விலை உயர்ந்த பொருள்களும் இருக்கும். காரீயம், ஆர்சனிக் போன்ற நச்சுப் பொருள்களும் இருக்கும். இந்த நச்சுப் பொருள்கள் நம்முடைய சுற்றுச் சூழலுக்கும் நமக்கும் பிரச்சினை கொடுக்கும். 
  3. நமக்கு பிரச்சினை அப்படின்னு புரியுது. இன்னும் கொஞ்சம் இதைப் பத்தி தெளிவா சொல்லுங்களேன்? 
  4. நம்ம பழைய செல் போன், ரேடியோ, டி.வி. இதை எல்லாம் நாம குப்பையில் போடலாமா?
    • போடக் கூடாது.  
  5. அப்ப வேற எங்க கொண்டு போய் போடுவது?
    • E-Waste ஐ போடுவதற்கு சில இடங்கள் இருக்கு. நம்ம ஊரில் இந்த போன் நம்பருக்கு 1800 - 419 - 3283 போன் செய்தா, அவங்களே வந்து வாங்கிக் கொண்டு செல்வார்கள்.  http://www.attero.in/
    • சில நோக்கியா போன் கடையில் பழைய உபயோகமில்லாத போன் போடுவதற்கு drop box இருக்கும். 
  6. இந்த blog தலைப்பில் REDUCE REUSE RECYCLE அப்படின்னு எழுதி இருக்கே?
    1. REDUCE - புதுசா Electrical-Electronic பொருள்கள் மூன்று மாதத்திற்கு ஒருமுறை வந்துகிட்டே இருக்கும். உதாரணத்துக்கு நம்ம செல் போனையே எடுத்துக் கொள்ளலாம். கொஞ்சம் யோசித்து பாருங்களேன். கடந்த இரண்டு ஆண்டுகளில் எத்தனை மாடல் புதுசு புதுசா வந்திருக்கு. i-phone, N97, E Series, C Series .... அப்படின்னு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கம்பெனி போன் வருது. புதுசா போன் வருதுன்னு பழைய போனை ஓரம் கட்டமா, தேவை இருந்தால் மட்டும் புது போன் வாங்கவும். இது போனுக்கு மட்டுமல்ல. எந்தப் பொருள் வாங்கும் போதும், கொஞ்சம் நிதானமா யோசிச்சு வாங்குங்க. காசும் மிச்சம். நமது சுற்றுச் சூழலுக்கும் நல்லது. 
    2. REUSE - சில நேரம் நம்ம போனில் பாட்டரி மட்டும் வேலை செய்யாது. அப்ப பாட்டரி மட்டும் புதுசா வாங்கி போட்டாலே போதும். இதையும் புதுசா எந்தப் பொருள் வாங்கும் போதும் மனசுல வச்சுகங்க. 
    3. RECYCLE - வேற வழியே இல்ல. இந்த போனோட Life அவ்வளவு தான் அப்படின்னா, சரியான RECYCLE பண்ற இடத்துல போனை கொண்டு போய் போடுங்க.
  7. E-Waste பிரச்சினையை நம்ம மக்கள் கிட்ட எப்படி விழிப்புணர்வு கொண்டு வருவது ?
    1. இப்ப இருக்கிற அரசியல்வாதிகள் மாதிரி இல்லாம, முதலில் நாம சரியா இருக்கணும்.  அதுக்குப் பிறகு, நம்மளை சுற்றி உள்ளவர்கள் (நம்ம வீடு, பக்கத்துக்கு வீடு, தெரு, அலுவலகம், பள்ளிக்கூட மாணவர்கள்/மாணவிகள்) அப்படின்னு எல்லார் கிட்டயும் விழிப்புணர்வு வரும். வர வைக்கணும். 
சில Useful Links:

Sunday, September 12, 2010

மரங்கள் வளர்ப்போம்! மனிதம் வளர்ப்போம்!!

GROW TREES! GROW HUMANITY!

மரங்கள்! இயற்கை நமக்குக் கொடுத்த வரம்!!! எளிதாகக் கிடைக்கும் சில விஷயங்களை நாமும் எளிதாகவே எடுத்துக் கொள்கிறோம். மரங்கள் அந்த வகையைச் சேர்ந்தவை. நாம் மரங்களை நினைப்பதும் இல்லை. அதனை மதிப்பதும் இல்லை. நமக்கு எதற்குமே நேரம் இல்லை. மரங்களை போற்றி வளர்ப்பதற்கு, நன்றி சொல்வதற்கு  எங்கே நேரம் கிடைக்கப் போகிறது?

மரங்களிடம் இருந்து நாம் பெற்றது என்ன? மரங்களுக்கு நாம் எதற்கு நன்றி சொல்ல வேண்டும் என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. விடை காண விழைந்த பொழுது எனக்கு உறைத்த(?) சில!  இதில் உள்ள எல்லா தகவல்களும் நமக்கு ஏற்கனவே தெரிந்த ஒன்று தான். நமது பள்ளிப் பாடங்களில் இருக்கும்(?) ஒன்று தான். தேர்வுகளில் மதிப்பெண்கள் பெறுவதற்காக நாம் புரிந்து (மனப்பாடம்?)  செய்த விஷயங்களில் இதுவும் ஒன்று. 

  • காற்று - நாம் சுவாசிக்கும் (உள்ளிழுக்கும்) காற்றில் உள்ள ஆக்சிஜன், மரங்கள் நமக்குக் கொடுப்பது. (இரவு நேரம் தவிர) 
  • நீர் - மரங்களால் பூமிக்கு அடியில் சேமிக்கப் படுகிறது. மரங்களால் மழை கிடைக்கிறது.
  • உணவு - பெரும்பான்மையான நமது காய்கறிகள், பழங்கள் அனைத்தும் தாவரங்களில் இருந்தும் மரங்களில் இருந்தும் தான் கிடைக்கிறது.
  • இருப்பிடம் (வீடு) - நம் வீடும், வீட்டில் உள்ள பொருள்களும் மரங்கள் இல்லாமல் நினைத்துப் பார்க்க கூட முடியாது. 
  • கல்வி - நாம் படிக்கும் புத்தகங்கள், எழுதும் நோட்டுகள், எழுத உதவும் காகித பென்சில்.  மரங்கள் இல்லை என்றால்?
  • போக்குவரத்துக்கு - புகைவண்டி, புகைவண்டி செல்லும் தண்டவாளம், பேருந்து, கப்பல் இவை அனைத்திலும் மரங்கள் இன்றும் பயன் படுத்தப் படுகின்றன. 
நமது வாழ்க்கையில் நாம் எதை எல்லாம் பெற்று உள்ளோமோ, அவை அனைத்திலும் மரங்களுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பங்கு உள்ளது. ஒரு மனித உயிரின் பிறப்பு (தொட்டில்) முதல் (இடுகாடு அல்லது சுடுகாடு) இறப்பு வரை ஒவ்வொரு நிகழ்விலும் மரங்கள் இருக்கின்றது.

சுருக்கமாகச் சொன்னால் மரங்கள் இல்லை என்றால் மனிதனும் இல்லை. 


மரங்களை வளர்க்க என்ன செய்யலாம்? 
  1. மரங்களை மனதார நேசிக்கக் கற்றுகொள்வோம். 
  2. நமது இன்றைய தலைமுறைக்கும் அடுத்த தலைமுறைக்கும் மரங்களை நேசிக்கக் கற்றுக் கொடுப்போம்.
  3. நமது ஒவ்வொரு பிறந்த நாளிலும் அல்லது திருமண நாளிலும் ஒரு மரமாவது நட்டு, அதனுடைய குறைந்த பட்ச காலத்திற்கு, அதனைப் பேணிக் காக்க உறுதி எடுப்போம். இதனை நமது பள்ளிக் கூடங்கள், கல்லூரிகள், அலுவலகங்கள் என அனைத்து தரப்பினரிடத்தும் எடுத்துச் செல்வோம். செயல் படுத்துவோம். 
  4.  மரம் நடும் பொழுது, நமது குழந்தைகளையும் நடச் சொல்லுவோம். மரங்களைப் பாதுகாக்கும் பொறுப்பை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்போம். 
  5. மரங்களையும் பரிசாகக் கொடுப்போம். 

மரங்கள் இல்லையேல் மனிதனும் இல்லை. மரங்கள் வளர்ப்போம்! மனிதம் வளர்ப்போம்!!

சில தகவல்கள்: 
  1. மரங்கள் வளர்க்க நேரமோ அல்லது இடமோ அல்லது பணமோ இல்லை என்பவர்களுக்கு, http://projectgreenhands.org/ என்ற இணைய தளத்தைப் பார்க்கவும். இந்த இணைய தளத்தில், மரங்களை பரிசாகவும் அளிக்கலாம். எனக்குத் தெரிந்தவரை, எங்கள் ஊரில் கூட இவர்கள் மரங்களை நட்டு பேணிக் காக்கிறார்கள். 
  2. உங்களுக்கு சென்னையில் நடுவதற்கு சிறிய மரம் (Sapling) வேண்டுமா? பின்வரும் அலை பேசி எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பவும்: - 9894062532 அல்லது   9962673668  http://chennaisocialservice.org/index.html 
  3. மரங்கள் வளர்க்க: http://www.grow-trees.com/home.aspx 
  4. விகடன் குழுமத்தில் இருந்து "பசுமை விகடன்" என்று ஒரு இதழ், இரு வாரங்களுக்கு ஒரு முறை வெளியாகிறது. 


Sunday, September 5, 2010

TEACHERS' DAY - SEPTEMBER 5

நாம் ஏன் "Teachers' Day" என்பதை "ஆசிரியை மற்றும் ஆசிரியர் தினம்" என்று சொல்வதில்லை?

"ஆசிரியர்" என்கிற தமிழ்ச் சொல் "ஆசிரியை/ஆசிரியர்" என்கிற இருவரையும் குறிக்கிறதா? எனக்குத் தெரியவில்லை. தெரிந்தவர்கள் தயவுசெய்து தெளிவு படுத்தவும்.

இந்தப் பதிவிற்கு:
ஆசிரியர் = ஆசிரியர்கள்/ஆசிரியைகள்
மாணவர்கள்  = மாணவர்கள்/மாணவிகள்


ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் சில(?) ஆசிரியர்கள் மட்டும் மறக்க முடியாதவர்கள்.  நாம் எல்லா ஆசிரியர்களையும் நினைவில் வைத்துக் கொள்ள முடிவதில்லை அல்லது நினைவில் வைக்க முயற்சிப்பதில்லை. அப்படியே நினைவில் இருந்தாலும், நம்முடைய வாழ்க்கை ஓட்டத்தில் நாம் அவர்களைப்   பற்றி நினைப்பது அல்லது அவர்களை சந்தித்துப் பேசுவது என்பது, நம்மில் பலருக்கும் மிகவும் அரிதான நிகழ்வு. 

எனது கிராமத்தில் உள்ள பஞ்சாயத்து ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நான் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படித்தேன். என்னால் எல்லா நிகழ்வுகளையும் நினைவில் கொண்டு வர முடியவில்லை.  அதே சமயம் சில விஷயங்களை மறக்கவே முடிவதில்லை.

என்னால் மறக்க முடியாத ஆசிரியை "ரம்பா டீச்சர்".  நாங்கள் "ரம்பா ஆசிரியை" என்று அழைத்ததாக நினைவில் இல்லை. எனது ஐந்தாம் வகுப்பு ஆசிரியை.

எங்கள் வகுப்பில் உள்ள அனைவரின் கையெழுத்தையும் திருத்தியவர்.  எங்கள் எல்லோரையும் "கல் சிலேட்டு"  வாங்க வைத்து, அதில் ஆணியை வைத்து இரண்டு கோடுகள் மற்றும் நான்கு கோடுகள் அவரே போட்டு, எழுத கற்றுக் கொடுத்தார். அவர் சொல்லியவாறு எழுதவில்லை என்றால் கை-முட்டியில் அடி விழும். ஐந்தாம் வகுப்பில் எத்தனை முறை அடி வாங்கினேன் என்று ஞாபகம் இல்லை. நிச்சயமாக காலாண்டு தேர்வு வரை அடி, அதிகமாக வாங்கியதாக ஞாபகம்.

கணிதம் மிக நன்றாக சொல்லிக் கொடுத்தார். மற்ற பாடங்கள் அதிகமாக நினைவில் இல்லை. நான் படித்த காலத்தில் நிச்சயமாக அவர், என் பள்ளியின் மிகச் சிறந்த ஆசிரியை.  ஆனால் இவரது வகுப்பிலும் நாங்கள் கேள்விகள் அதிகம் கேட்கவில்லை. பயமும் ஒரு காரணம். கேள்வி கேட்டு, புரிந்து படிப்பதை கற்றுக் கொடுக்காததும் அல்லது கற்றுக் கொள்ளாததும்  ஒரு காரணம்.   இந்த முறை ஊருக்குச் செல்லும் பொழுது இவரை சந்திக்க வேண்டும்.

ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை கற்றுக் கொடுப்பது என்பதும் சுலபமான ஒன்றல்ல. நிச்சயமாக மிகவும் Challenging ஆன ஒரு வேலை.  அதுவும் ஒரே ஆசிரியர், சாதாரணமாக 40 முதல் 60 மாணவர்களை  வழி நடத்துவது என்பது கடினமான ஒன்று. 

சில ஆக்க (?) பூர்வமான யோசனைகள்:

1. ஆசிரியர் - மாணவர்கள் விகிதத்தை 1 : 20 அல்லது 1 : 15 ஆக மாற்ற ஆக்க பூர்வமான முயற்சிகளை மாநில/மத்திய (நடுவண்) அரசுகள் எடுக்க வேண்டும்.

2. ஆசிரியர்களின் தரத்தை மேம்படுத்தல். மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தல்.

ஆசிரியர் என்பவர் எப்படி இருக்க வேண்டும்? (Ideal Teacher ?)
            அன்பு - மாணவர்களின் பயத்தை போக்குதல்.
            பண்பு - நல்ல பண்புகளை கற்றுக் கொடுத்தல், தானும் கடைப்பிடித்தல்.
            கற்றுக் கொடுக்கும் ஆர்வம்.
            புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளும் ஆர்வம்.
           கேள்வி கேட்கும் திறனை மாணவர்களிடம் ஊக்கப் படுத்துதல்.
           புதிய முறைகளில் கற்றுக் கொடுத்தல்.
           மாணவர்களிடம் உள்ள தனித்திறனை அறிந்து, அதை வளர்த்துக் கொள்ளும் வழி முறைகளை பயிற்றுவித்தல்
           மாணவர்களின் பிரச்சனைகளை புரிந்து கொள்ளல்

நான் திருச்சியில் பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுது எனது பக்கத்து வகுப்பு ஆசிரியர் TMT  சார். நான் அவரிடம் சிறப்பு வகுப்பில் (Tuition) படித்தேன். எனது Ideal Teacher .  என்னை பத்தாம் வகுப்பு முதல் வழி நடத்தியவர்.  இன்று காலை அவரிடம்
அலைபேசி-யில் பேச வேண்டும். இவரைப் பற்றி எழுதுவதற்கு நிறைய உள்ளது. .......அடுத்த பதிவில்...

பின் குறிப்பு:
இந்தியாவில் TEACHERS' DAY சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாள் அன்று கொண்டாடப் படுகிறது.  இவரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள: http://en.wikipedia.org/wiki/Sarvapalli_Radhakrishnan
உலகெங்கிலும் வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு நாட்களில் கொண்டாடப் படுகிறது.
http://en.wikipedia.org/wiki/Teachers'_Day