Pages

Sunday, September 12, 2010

மரங்கள் வளர்ப்போம்! மனிதம் வளர்ப்போம்!!

GROW TREES! GROW HUMANITY!

மரங்கள்! இயற்கை நமக்குக் கொடுத்த வரம்!!! எளிதாகக் கிடைக்கும் சில விஷயங்களை நாமும் எளிதாகவே எடுத்துக் கொள்கிறோம். மரங்கள் அந்த வகையைச் சேர்ந்தவை. நாம் மரங்களை நினைப்பதும் இல்லை. அதனை மதிப்பதும் இல்லை. நமக்கு எதற்குமே நேரம் இல்லை. மரங்களை போற்றி வளர்ப்பதற்கு, நன்றி சொல்வதற்கு  எங்கே நேரம் கிடைக்கப் போகிறது?

மரங்களிடம் இருந்து நாம் பெற்றது என்ன? மரங்களுக்கு நாம் எதற்கு நன்றி சொல்ல வேண்டும் என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. விடை காண விழைந்த பொழுது எனக்கு உறைத்த(?) சில!  இதில் உள்ள எல்லா தகவல்களும் நமக்கு ஏற்கனவே தெரிந்த ஒன்று தான். நமது பள்ளிப் பாடங்களில் இருக்கும்(?) ஒன்று தான். தேர்வுகளில் மதிப்பெண்கள் பெறுவதற்காக நாம் புரிந்து (மனப்பாடம்?)  செய்த விஷயங்களில் இதுவும் ஒன்று. 

  • காற்று - நாம் சுவாசிக்கும் (உள்ளிழுக்கும்) காற்றில் உள்ள ஆக்சிஜன், மரங்கள் நமக்குக் கொடுப்பது. (இரவு நேரம் தவிர) 
  • நீர் - மரங்களால் பூமிக்கு அடியில் சேமிக்கப் படுகிறது. மரங்களால் மழை கிடைக்கிறது.
  • உணவு - பெரும்பான்மையான நமது காய்கறிகள், பழங்கள் அனைத்தும் தாவரங்களில் இருந்தும் மரங்களில் இருந்தும் தான் கிடைக்கிறது.
  • இருப்பிடம் (வீடு) - நம் வீடும், வீட்டில் உள்ள பொருள்களும் மரங்கள் இல்லாமல் நினைத்துப் பார்க்க கூட முடியாது. 
  • கல்வி - நாம் படிக்கும் புத்தகங்கள், எழுதும் நோட்டுகள், எழுத உதவும் காகித பென்சில்.  மரங்கள் இல்லை என்றால்?
  • போக்குவரத்துக்கு - புகைவண்டி, புகைவண்டி செல்லும் தண்டவாளம், பேருந்து, கப்பல் இவை அனைத்திலும் மரங்கள் இன்றும் பயன் படுத்தப் படுகின்றன. 
நமது வாழ்க்கையில் நாம் எதை எல்லாம் பெற்று உள்ளோமோ, அவை அனைத்திலும் மரங்களுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பங்கு உள்ளது. ஒரு மனித உயிரின் பிறப்பு (தொட்டில்) முதல் (இடுகாடு அல்லது சுடுகாடு) இறப்பு வரை ஒவ்வொரு நிகழ்விலும் மரங்கள் இருக்கின்றது.

சுருக்கமாகச் சொன்னால் மரங்கள் இல்லை என்றால் மனிதனும் இல்லை. 


மரங்களை வளர்க்க என்ன செய்யலாம்? 
  1. மரங்களை மனதார நேசிக்கக் கற்றுகொள்வோம். 
  2. நமது இன்றைய தலைமுறைக்கும் அடுத்த தலைமுறைக்கும் மரங்களை நேசிக்கக் கற்றுக் கொடுப்போம்.
  3. நமது ஒவ்வொரு பிறந்த நாளிலும் அல்லது திருமண நாளிலும் ஒரு மரமாவது நட்டு, அதனுடைய குறைந்த பட்ச காலத்திற்கு, அதனைப் பேணிக் காக்க உறுதி எடுப்போம். இதனை நமது பள்ளிக் கூடங்கள், கல்லூரிகள், அலுவலகங்கள் என அனைத்து தரப்பினரிடத்தும் எடுத்துச் செல்வோம். செயல் படுத்துவோம். 
  4.  மரம் நடும் பொழுது, நமது குழந்தைகளையும் நடச் சொல்லுவோம். மரங்களைப் பாதுகாக்கும் பொறுப்பை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்போம். 
  5. மரங்களையும் பரிசாகக் கொடுப்போம். 

மரங்கள் இல்லையேல் மனிதனும் இல்லை. மரங்கள் வளர்ப்போம்! மனிதம் வளர்ப்போம்!!

சில தகவல்கள்: 
  1. மரங்கள் வளர்க்க நேரமோ அல்லது இடமோ அல்லது பணமோ இல்லை என்பவர்களுக்கு, http://projectgreenhands.org/ என்ற இணைய தளத்தைப் பார்க்கவும். இந்த இணைய தளத்தில், மரங்களை பரிசாகவும் அளிக்கலாம். எனக்குத் தெரிந்தவரை, எங்கள் ஊரில் கூட இவர்கள் மரங்களை நட்டு பேணிக் காக்கிறார்கள். 
  2. உங்களுக்கு சென்னையில் நடுவதற்கு சிறிய மரம் (Sapling) வேண்டுமா? பின்வரும் அலை பேசி எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பவும்: - 9894062532 அல்லது   9962673668  http://chennaisocialservice.org/index.html 
  3. மரங்கள் வளர்க்க: http://www.grow-trees.com/home.aspx 
  4. விகடன் குழுமத்தில் இருந்து "பசுமை விகடன்" என்று ஒரு இதழ், இரு வாரங்களுக்கு ஒரு முறை வெளியாகிறது. 


No comments:

Post a Comment