Pages

Wednesday, September 29, 2010

Sunday, September 26, 2010

இரத்த தானம் செய்வோம்!

இரத்த தானம்! நமக்கு இயற்கை கொடுத்த கொடையை, நாம் இருக்கும் பொழுதே பிறர்க்கும் கொடுக்கக்  கூடிய ஒன்று. 18 வயது முதல் 55 வயது வரை , ஆரோக்கியமாக இருக்கும் அனைவரும் 12 வாரங்களுக்கு ஒரு முறை ஒரு யூனிட் (350 ml to 450 ml) கொடையாகக் கொடுப்பது நமக்கும் நல்லது. நாம் பிறர்க்கு நல்லது செய்யக் கிடைத்த வாய்ப்பு.

இதுவரை இரத்த தானம் செய்ய வில்லையா? இன்றே செய்திடுவோம். குறைந்த பட்சம் ஓர் ஆண்டுக்கு 2 முதல் 3 முறை இரத்த தானம் செய்வோம்.

இரத்தம் கொடுப்பதற்கும், பெறுவதற்கும் பின்வரும் வலை தளங்களில் பதிந்து கொள்ளவும்.
இரத்த தானம் பற்றிய தகவல்கள்:
நீங்கள் இரத்தம் கொடுக்கும் முன் தெரிந்து கொள்ள வேண்டியவை http://www.blooda2z.com/blood-donor-requirements
எங்கெல்லாம் இரத்தம் தேவைப் படுகிறது?
இரத்த தானம் பற்றிய சில தகவல்கள்:

தமிழ் புத்தகங்கள் வாங்க

  1. கிழக்கு பதிப்பகம் - An imprint of New Horizon Media. வலை தளம் www.nhm.in  குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் படிக்க வேண்டிய புத்தகங்கள் வெளியிடப் படுகின்றது. வீட்டில் உபயோகமில்லாத தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தவிர்த்து ஆடியோ புத்தகங்கள் கேட்கலாம். நிச்சயமாக தமிழ் புத்தக உலகில் ஒரு மாற்றத்தை கொண்டு வந்துள்ளார்கள். நிறுவனர் பத்ரி மற்றும் நிறுவனத்தில் உள்ள அனைவருக்கும் நன்றி. மேலும் நல்ல புத்தகங்கள், குறிப்பாக பள்ளி மாணவர்களுக்கும்/மாணவிகளுக்கும் தேவையான நல்ல புத்தகங்கள் நிறைய வர வேண்டும். சென்னையில் புத்தகங்கள் வாங்க: முகவரி:

    கிழக்கு புத்தக ஷோரூம்
    3B, பி.எம்.ஜி. காம்ப்ளக்ஸ் (தரைத்தளம்)
    57, தெற்கு உஸ்மான் சாலை (ரத்னா பவன் எதிரில், தி.நகர் பேருந்து நிலையம் அருகில்)
    தி.நகர்
    சென்னை - 600 017
    தொலைபேசி: 044-42868126
    மொபைல்: 95000-45640  பத்ரி அவர்களின் வலைத்தளம்: 
    http://thoughtsintamil.blogspot.com/ 
  2. சுகி. சிவம் அவர்களின் புத்தகங்கள். நல்ல கருத்துக்கள், நம்மை யோசிக்க வைக்கும்.  http://www.sukisivam.com/publications_books.asp

Saturday, September 25, 2010

வேலி காத்தான் மரத்தை அழிப்போம்!!!

வேலி காத்தான் அல்லது சீமைக் கருவேல் அல்லது வெளி கருவை அல்லது டில்லி முள் அல்லது காட்டு கருவல் அல்லது சீன கருவல், அப்பா தமிழ் நாட்டுல ஒரு மரத்துக்கு எத்தனை பெயர்கள்? 

இந்த மரம் இருந்தா, தயவு செய்து மரத்தையும், மரத்தின் வேரையும் முழுமையாக அழித்து விடுங்கள். 

நம்ம தமிழ் நாட்டுல இராமநாதபுரம் மாவட்டம் வறட்சியாக இருப்பதில் இந்த மரங்களுக்கும் பெரும் பங்குண்டாம். இந்த மரம் நிலத்தடி தண்ணீரை முழுமையாக காலி பண்ணிடுமாம். 

இன்னும் இதை பத்தி கொஞ்சம் தெளிவா படித்து விட்டு எழுதறேன்.

இந்த மரத்தை பற்றி சில தகவல்கள்:

http://www.fao.org/docrep/006/ad317e/AD317E07.htm

Sunday, September 19, 2010

E - WASTE - REDUCE REUSE RECYCLE

  1. E-Waste அப்படின்னா என்ன ? 
    • நம்ம பயன் படுத்தாத அல்லது பயன் படுத்த முடியாத Electrical-Electronic பொருள்களை E-வேஸ்ட் என்று சொல்லலாம். உதாரணத்துக்கு நம்ம வீட்டில்  உள்ள பழைய ரேடியோ,  டேப்-ரெகார்டர், வயர், பாட்டரி முதல் நாம use பண்ணாத வாஷிங் மெஷின், TV, செல் போன் வரை எல்லாமே E-Waste தான்.
  2. E-Waste னால் என்ன பிரச்சினை ? 
    • E-Waste ல் தங்கம், வெள்ளி, பிளாட்டினம், தாமிரம் போன்ற விலை உயர்ந்த பொருள்களும் இருக்கும். காரீயம், ஆர்சனிக் போன்ற நச்சுப் பொருள்களும் இருக்கும். இந்த நச்சுப் பொருள்கள் நம்முடைய சுற்றுச் சூழலுக்கும் நமக்கும் பிரச்சினை கொடுக்கும். 
  3. நமக்கு பிரச்சினை அப்படின்னு புரியுது. இன்னும் கொஞ்சம் இதைப் பத்தி தெளிவா சொல்லுங்களேன்? 
  4. நம்ம பழைய செல் போன், ரேடியோ, டி.வி. இதை எல்லாம் நாம குப்பையில் போடலாமா?
    • போடக் கூடாது.  
  5. அப்ப வேற எங்க கொண்டு போய் போடுவது?
    • E-Waste ஐ போடுவதற்கு சில இடங்கள் இருக்கு. நம்ம ஊரில் இந்த போன் நம்பருக்கு 1800 - 419 - 3283 போன் செய்தா, அவங்களே வந்து வாங்கிக் கொண்டு செல்வார்கள்.  http://www.attero.in/
    • சில நோக்கியா போன் கடையில் பழைய உபயோகமில்லாத போன் போடுவதற்கு drop box இருக்கும். 
  6. இந்த blog தலைப்பில் REDUCE REUSE RECYCLE அப்படின்னு எழுதி இருக்கே?
    1. REDUCE - புதுசா Electrical-Electronic பொருள்கள் மூன்று மாதத்திற்கு ஒருமுறை வந்துகிட்டே இருக்கும். உதாரணத்துக்கு நம்ம செல் போனையே எடுத்துக் கொள்ளலாம். கொஞ்சம் யோசித்து பாருங்களேன். கடந்த இரண்டு ஆண்டுகளில் எத்தனை மாடல் புதுசு புதுசா வந்திருக்கு. i-phone, N97, E Series, C Series .... அப்படின்னு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கம்பெனி போன் வருது. புதுசா போன் வருதுன்னு பழைய போனை ஓரம் கட்டமா, தேவை இருந்தால் மட்டும் புது போன் வாங்கவும். இது போனுக்கு மட்டுமல்ல. எந்தப் பொருள் வாங்கும் போதும், கொஞ்சம் நிதானமா யோசிச்சு வாங்குங்க. காசும் மிச்சம். நமது சுற்றுச் சூழலுக்கும் நல்லது. 
    2. REUSE - சில நேரம் நம்ம போனில் பாட்டரி மட்டும் வேலை செய்யாது. அப்ப பாட்டரி மட்டும் புதுசா வாங்கி போட்டாலே போதும். இதையும் புதுசா எந்தப் பொருள் வாங்கும் போதும் மனசுல வச்சுகங்க. 
    3. RECYCLE - வேற வழியே இல்ல. இந்த போனோட Life அவ்வளவு தான் அப்படின்னா, சரியான RECYCLE பண்ற இடத்துல போனை கொண்டு போய் போடுங்க.
  7. E-Waste பிரச்சினையை நம்ம மக்கள் கிட்ட எப்படி விழிப்புணர்வு கொண்டு வருவது ?
    1. இப்ப இருக்கிற அரசியல்வாதிகள் மாதிரி இல்லாம, முதலில் நாம சரியா இருக்கணும்.  அதுக்குப் பிறகு, நம்மளை சுற்றி உள்ளவர்கள் (நம்ம வீடு, பக்கத்துக்கு வீடு, தெரு, அலுவலகம், பள்ளிக்கூட மாணவர்கள்/மாணவிகள்) அப்படின்னு எல்லார் கிட்டயும் விழிப்புணர்வு வரும். வர வைக்கணும். 
சில Useful Links:

Sunday, September 12, 2010

மரங்கள் வளர்ப்போம்! மனிதம் வளர்ப்போம்!!

GROW TREES! GROW HUMANITY!

மரங்கள்! இயற்கை நமக்குக் கொடுத்த வரம்!!! எளிதாகக் கிடைக்கும் சில விஷயங்களை நாமும் எளிதாகவே எடுத்துக் கொள்கிறோம். மரங்கள் அந்த வகையைச் சேர்ந்தவை. நாம் மரங்களை நினைப்பதும் இல்லை. அதனை மதிப்பதும் இல்லை. நமக்கு எதற்குமே நேரம் இல்லை. மரங்களை போற்றி வளர்ப்பதற்கு, நன்றி சொல்வதற்கு  எங்கே நேரம் கிடைக்கப் போகிறது?

மரங்களிடம் இருந்து நாம் பெற்றது என்ன? மரங்களுக்கு நாம் எதற்கு நன்றி சொல்ல வேண்டும் என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. விடை காண விழைந்த பொழுது எனக்கு உறைத்த(?) சில!  இதில் உள்ள எல்லா தகவல்களும் நமக்கு ஏற்கனவே தெரிந்த ஒன்று தான். நமது பள்ளிப் பாடங்களில் இருக்கும்(?) ஒன்று தான். தேர்வுகளில் மதிப்பெண்கள் பெறுவதற்காக நாம் புரிந்து (மனப்பாடம்?)  செய்த விஷயங்களில் இதுவும் ஒன்று. 

  • காற்று - நாம் சுவாசிக்கும் (உள்ளிழுக்கும்) காற்றில் உள்ள ஆக்சிஜன், மரங்கள் நமக்குக் கொடுப்பது. (இரவு நேரம் தவிர) 
  • நீர் - மரங்களால் பூமிக்கு அடியில் சேமிக்கப் படுகிறது. மரங்களால் மழை கிடைக்கிறது.
  • உணவு - பெரும்பான்மையான நமது காய்கறிகள், பழங்கள் அனைத்தும் தாவரங்களில் இருந்தும் மரங்களில் இருந்தும் தான் கிடைக்கிறது.
  • இருப்பிடம் (வீடு) - நம் வீடும், வீட்டில் உள்ள பொருள்களும் மரங்கள் இல்லாமல் நினைத்துப் பார்க்க கூட முடியாது. 
  • கல்வி - நாம் படிக்கும் புத்தகங்கள், எழுதும் நோட்டுகள், எழுத உதவும் காகித பென்சில்.  மரங்கள் இல்லை என்றால்?
  • போக்குவரத்துக்கு - புகைவண்டி, புகைவண்டி செல்லும் தண்டவாளம், பேருந்து, கப்பல் இவை அனைத்திலும் மரங்கள் இன்றும் பயன் படுத்தப் படுகின்றன. 
நமது வாழ்க்கையில் நாம் எதை எல்லாம் பெற்று உள்ளோமோ, அவை அனைத்திலும் மரங்களுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பங்கு உள்ளது. ஒரு மனித உயிரின் பிறப்பு (தொட்டில்) முதல் (இடுகாடு அல்லது சுடுகாடு) இறப்பு வரை ஒவ்வொரு நிகழ்விலும் மரங்கள் இருக்கின்றது.

சுருக்கமாகச் சொன்னால் மரங்கள் இல்லை என்றால் மனிதனும் இல்லை. 


மரங்களை வளர்க்க என்ன செய்யலாம்? 
  1. மரங்களை மனதார நேசிக்கக் கற்றுகொள்வோம். 
  2. நமது இன்றைய தலைமுறைக்கும் அடுத்த தலைமுறைக்கும் மரங்களை நேசிக்கக் கற்றுக் கொடுப்போம்.
  3. நமது ஒவ்வொரு பிறந்த நாளிலும் அல்லது திருமண நாளிலும் ஒரு மரமாவது நட்டு, அதனுடைய குறைந்த பட்ச காலத்திற்கு, அதனைப் பேணிக் காக்க உறுதி எடுப்போம். இதனை நமது பள்ளிக் கூடங்கள், கல்லூரிகள், அலுவலகங்கள் என அனைத்து தரப்பினரிடத்தும் எடுத்துச் செல்வோம். செயல் படுத்துவோம். 
  4.  மரம் நடும் பொழுது, நமது குழந்தைகளையும் நடச் சொல்லுவோம். மரங்களைப் பாதுகாக்கும் பொறுப்பை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்போம். 
  5. மரங்களையும் பரிசாகக் கொடுப்போம். 

மரங்கள் இல்லையேல் மனிதனும் இல்லை. மரங்கள் வளர்ப்போம்! மனிதம் வளர்ப்போம்!!

சில தகவல்கள்: 
  1. மரங்கள் வளர்க்க நேரமோ அல்லது இடமோ அல்லது பணமோ இல்லை என்பவர்களுக்கு, http://projectgreenhands.org/ என்ற இணைய தளத்தைப் பார்க்கவும். இந்த இணைய தளத்தில், மரங்களை பரிசாகவும் அளிக்கலாம். எனக்குத் தெரிந்தவரை, எங்கள் ஊரில் கூட இவர்கள் மரங்களை நட்டு பேணிக் காக்கிறார்கள். 
  2. உங்களுக்கு சென்னையில் நடுவதற்கு சிறிய மரம் (Sapling) வேண்டுமா? பின்வரும் அலை பேசி எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பவும்: - 9894062532 அல்லது   9962673668  http://chennaisocialservice.org/index.html 
  3. மரங்கள் வளர்க்க: http://www.grow-trees.com/home.aspx 
  4. விகடன் குழுமத்தில் இருந்து "பசுமை விகடன்" என்று ஒரு இதழ், இரு வாரங்களுக்கு ஒரு முறை வெளியாகிறது. 


Sunday, September 5, 2010

TEACHERS' DAY - SEPTEMBER 5

நாம் ஏன் "Teachers' Day" என்பதை "ஆசிரியை மற்றும் ஆசிரியர் தினம்" என்று சொல்வதில்லை?

"ஆசிரியர்" என்கிற தமிழ்ச் சொல் "ஆசிரியை/ஆசிரியர்" என்கிற இருவரையும் குறிக்கிறதா? எனக்குத் தெரியவில்லை. தெரிந்தவர்கள் தயவுசெய்து தெளிவு படுத்தவும்.

இந்தப் பதிவிற்கு:
ஆசிரியர் = ஆசிரியர்கள்/ஆசிரியைகள்
மாணவர்கள்  = மாணவர்கள்/மாணவிகள்


ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் சில(?) ஆசிரியர்கள் மட்டும் மறக்க முடியாதவர்கள்.  நாம் எல்லா ஆசிரியர்களையும் நினைவில் வைத்துக் கொள்ள முடிவதில்லை அல்லது நினைவில் வைக்க முயற்சிப்பதில்லை. அப்படியே நினைவில் இருந்தாலும், நம்முடைய வாழ்க்கை ஓட்டத்தில் நாம் அவர்களைப்   பற்றி நினைப்பது அல்லது அவர்களை சந்தித்துப் பேசுவது என்பது, நம்மில் பலருக்கும் மிகவும் அரிதான நிகழ்வு. 

எனது கிராமத்தில் உள்ள பஞ்சாயத்து ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நான் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படித்தேன். என்னால் எல்லா நிகழ்வுகளையும் நினைவில் கொண்டு வர முடியவில்லை.  அதே சமயம் சில விஷயங்களை மறக்கவே முடிவதில்லை.

என்னால் மறக்க முடியாத ஆசிரியை "ரம்பா டீச்சர்".  நாங்கள் "ரம்பா ஆசிரியை" என்று அழைத்ததாக நினைவில் இல்லை. எனது ஐந்தாம் வகுப்பு ஆசிரியை.

எங்கள் வகுப்பில் உள்ள அனைவரின் கையெழுத்தையும் திருத்தியவர்.  எங்கள் எல்லோரையும் "கல் சிலேட்டு"  வாங்க வைத்து, அதில் ஆணியை வைத்து இரண்டு கோடுகள் மற்றும் நான்கு கோடுகள் அவரே போட்டு, எழுத கற்றுக் கொடுத்தார். அவர் சொல்லியவாறு எழுதவில்லை என்றால் கை-முட்டியில் அடி விழும். ஐந்தாம் வகுப்பில் எத்தனை முறை அடி வாங்கினேன் என்று ஞாபகம் இல்லை. நிச்சயமாக காலாண்டு தேர்வு வரை அடி, அதிகமாக வாங்கியதாக ஞாபகம்.

கணிதம் மிக நன்றாக சொல்லிக் கொடுத்தார். மற்ற பாடங்கள் அதிகமாக நினைவில் இல்லை. நான் படித்த காலத்தில் நிச்சயமாக அவர், என் பள்ளியின் மிகச் சிறந்த ஆசிரியை.  ஆனால் இவரது வகுப்பிலும் நாங்கள் கேள்விகள் அதிகம் கேட்கவில்லை. பயமும் ஒரு காரணம். கேள்வி கேட்டு, புரிந்து படிப்பதை கற்றுக் கொடுக்காததும் அல்லது கற்றுக் கொள்ளாததும்  ஒரு காரணம்.   இந்த முறை ஊருக்குச் செல்லும் பொழுது இவரை சந்திக்க வேண்டும்.

ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை கற்றுக் கொடுப்பது என்பதும் சுலபமான ஒன்றல்ல. நிச்சயமாக மிகவும் Challenging ஆன ஒரு வேலை.  அதுவும் ஒரே ஆசிரியர், சாதாரணமாக 40 முதல் 60 மாணவர்களை  வழி நடத்துவது என்பது கடினமான ஒன்று. 

சில ஆக்க (?) பூர்வமான யோசனைகள்:

1. ஆசிரியர் - மாணவர்கள் விகிதத்தை 1 : 20 அல்லது 1 : 15 ஆக மாற்ற ஆக்க பூர்வமான முயற்சிகளை மாநில/மத்திய (நடுவண்) அரசுகள் எடுக்க வேண்டும்.

2. ஆசிரியர்களின் தரத்தை மேம்படுத்தல். மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தல்.

ஆசிரியர் என்பவர் எப்படி இருக்க வேண்டும்? (Ideal Teacher ?)
            அன்பு - மாணவர்களின் பயத்தை போக்குதல்.
            பண்பு - நல்ல பண்புகளை கற்றுக் கொடுத்தல், தானும் கடைப்பிடித்தல்.
            கற்றுக் கொடுக்கும் ஆர்வம்.
            புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளும் ஆர்வம்.
           கேள்வி கேட்கும் திறனை மாணவர்களிடம் ஊக்கப் படுத்துதல்.
           புதிய முறைகளில் கற்றுக் கொடுத்தல்.
           மாணவர்களிடம் உள்ள தனித்திறனை அறிந்து, அதை வளர்த்துக் கொள்ளும் வழி முறைகளை பயிற்றுவித்தல்
           மாணவர்களின் பிரச்சனைகளை புரிந்து கொள்ளல்

நான் திருச்சியில் பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுது எனது பக்கத்து வகுப்பு ஆசிரியர் TMT  சார். நான் அவரிடம் சிறப்பு வகுப்பில் (Tuition) படித்தேன். எனது Ideal Teacher .  என்னை பத்தாம் வகுப்பு முதல் வழி நடத்தியவர்.  இன்று காலை அவரிடம்
அலைபேசி-யில் பேச வேண்டும். இவரைப் பற்றி எழுதுவதற்கு நிறைய உள்ளது. .......அடுத்த பதிவில்...

பின் குறிப்பு:
இந்தியாவில் TEACHERS' DAY சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாள் அன்று கொண்டாடப் படுகிறது.  இவரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள: http://en.wikipedia.org/wiki/Sarvapalli_Radhakrishnan
உலகெங்கிலும் வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு நாட்களில் கொண்டாடப் படுகிறது.
http://en.wikipedia.org/wiki/Teachers'_Day